மன்னர் பிரதேசசபையின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிறைவு மற்றும் உள்ளுராட்சி வார நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு விழா

மன்னர் பிரதேசசபையின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிறைவு மற்றும் உள்ளுராட்சி வார நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு விழா 23.11.2023 ஆம் திகதி எமது சபையில் சிறப்பாக இடம்பெற்றது.
+17
All reactions:

Rubini Rubs, Thushy Merlin and 13 others

லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் எமது மன்னார் பிரதேச சபையில் 17.11.2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் எமது மன்னார் பிரதேச சபையில் 17.11.2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மன்னார்பிராந்திய உள்ளுராட்சி உதவிஆணையாளர் மற்றும் பிராந்திய உள்ளுராட்சி அலுவலக உத்தியோகத்தர்கள், எமது மன்னார் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
+10
All reactions:

Rubini Rubs, Jancy Dariyas and 5 others

PROVINCEAL SPECIFIC DEVELOPMENT GRANT WORKS – 2023

Work Name – Kattaspathiri Concrete Road
Allocation – 4.0Mn
Source of Funds – PSDG
Name of Contractor – Thuram Construction.
Contract Period – 3 Months
Work Name – Pesalai Concrete Road
Allocation – 3.5Mn
Source of Funds – PSDG
Name of Contractor – S.T.S Fernando Construction.
Contract Period – 3 Months
+2
All reactions:

Clement Roshan, Kiriminath Kiriminath and 6 others

டெங்குபரவலைக்கட்டுப்படுத்தல்-சிரமதானம்

மாவட்ட செயலாளரின் தலைமையில் 18.10.2023 ம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற டெங்குபரவலைக்கட்டுப்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் 24.10.2023ம் திகதியில் இருந்து 31.10.2023ம் திகதி வரை எமது மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 24.10.2023 ம் திகதி எமது மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான பொருட்கள் எமது பிரதேச சபை ஊழியர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடனும் எமது வாகனங்களின் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

மரநடுகை

மரநடுகை மாதத்தை முன்;னிட்டு மன்னார் பிரதேச சபை மற்றும் உப அலுவலகங்கள் என்பவற்றில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடக பயன்தரும்மரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு எமது பிரதான அலுவலகம் மற்றம் உப அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு அவ் அலுவலகங்களின் பொறுப்பதிகாரிகள் உத்தியோகத்தர்கள் முலம் மரநடுகை செய்யப்பட்டது

மன்னார் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொருளாதாரரீதியாக வருமானம் குறைந்த வறுமைக்கோட்டிற்கு உட்டபட்ட மக்களின் சுயதொழில் ஊக்குவிப்பு

CDLG திட்டத்தினூடாக ………ம் திகதி மன்னார் பிரதே சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல் 10மணிக்கு தவிசாளரின் தலைமையில் இடம்பெற்றது. மன்னார் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொருளாதாரரீதியாக வருமானம் குறைந்த வறுமைக்கோட்டிற்கு உட்டபட்ட மக்களில் இருந்து 50 பயனாளிகள்
தெரிவு செய்யப்பட்டு அவர்கள் சுயதொழிலில்  தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக 1ம் கட்ட கொடுப்பனவு மன்னார் பிரதேச சபையின் பிரதான அலுவலக்தில் கௌரவ தவிசாளரினால் காசோலை மூலம்
தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

உலக சுத்திகரிப்பு தினம் 2023

உலக சுத்திகரிப்பு தினம் 2023
எமது மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட உபஅலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு கீழ் உள்ளவாறு
அறிவுத்தல் வழங்கப்பட்டு உலக சுத்திகரிப்பு தினம் 2023.09.16 ஆம் திகதி முழுமையாக அனுஸ்ரிக்கப்பட்டது அத்துடன் எமது பிரதானஅலுவலகத்தில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்ளின் முழுபங்களிப்புடன் 15.09.2023 ஆம் திகதி துப்பரவு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன
உபஅலுவலக பொறுப்பதிகாரி
பேசாலை,தலைமன்னார்,எருக்கலம்பிட்டி,தாராபுரம், உயிலங்குளம்,திருகேதீஸ்வரம்
மேற்படி விடயம் தொடர்பாக ஒவ்வாறு வருடமும் செப்ரம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கொண்டாடப்படும் உலக சுத்திகரிப்பு
தினம் “முறையற்ற வகையில் கடற்கரை,ஆற்றினை அண்டிய காடுகள் மற்றும் பாதைகளுக்கு விடுவிக்கும் கழிவுகளை சுத்திகரித்தல்” எனும் தொணிப்பொருளுக்கமையவாக எதிர் வரும் 2023.09.16 ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது.
எனவே மேற்படி தொணிப்பொருளுக்கமையவாக 2023.09.16 ஆம் திகதி உபஅலுவலக எல்லைப்பரப்ற்குள் உள்ள பிரதான வீதி கடற்கரையோரங்கள் மற்றும் கால்வாய் பகுதியில் அடைபட்டுள்ள குப்பைகளை அகற்றி துப்பரவு செய்யப்பட்டது
மன்னார் பிரதேச சபை

கர்ப்பிணித்தாய்மார்க்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம்

மன்னார் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக கர்ப்பிணித்தாய்மார்க்கான போசாக்கு உணவு வழங்கும் திட்ட நிகழ்ச்சியானது இன்று (14.09.2023) வியாழக்கிழமை அன்று எமது சபையின் செயலாளர் திருமதி M.L.செல்வராஜ் குரூஸ் அவர்களின்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் எமத வேண்டுகோளிற்கமைய மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவுகளுக்கமைய மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வருமானம் குறைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இத்திட்டத்தினூடாக குறை நிரப்பு போசாக்கிற்கான சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன. இதில்75 பயனாளிகள் பயனடைந்தள்ளனர் சென்ற வருடத்தினை விட இந்த வருடம் 25 பயனாளிகள் அதிகமாகபயனடைந்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.