மக்கள் பங்களிப்புடனான பாதீடு முன்மொழிவுக்கூட்டம் – 2025

மன்னார் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான பாதீட்டினை தயாரிப்பதன் நோக்கில் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கூட்டங்கள் நடாத்தப்பட்டு தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கற்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வு – 2024

மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது 06.08.2024 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் செயலாளரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், நிதி உதவியாளர் மற்றும் அலுவலகம்சார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுதல்

எமது மன்னார் பிரதேச சபையின் எல்லைகுட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகளாகிய கண்ணாடி, பொலித்தீன் மற்றும் உக்கும் கழிவுகள் போன்றவை இனிவரும் காலங்களில் தரம் பிரித்தே அகற்றப்படும்.
அத்துடன் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான கொள்கலன்களும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் இவற்றை தரம் பிரித்து சேகரிக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்களில் இலவசமாக நூலக அங்கத்துவப்படிவங்கள் வழங்கல்

“புத்தகம்”
மூடிய பக்கங்களினுள்ளே முத்தாக ஒளிந்திருக்கும் உன் வாழ்வை உயர்த்தும் வைர வரிகள்.வாசிப்பின் முக்கியத்துவத்தினையும் அதன் பயன்பாட்டினையும் மாணவச்செல்வங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் உணர்ந்து பூரணமான உச்ச பயனை அடைவதனை நோக்காகக் கொண்டு மன்னார் பிரதேசசபை நூலக வாசக அங்கத்துவப் படிவத்தினை இலவசமாக வழங்கிக்கொண்டு வருகின்றது. எமது அனைத்து உப அலுவலக நூலகங்களிலும் அலுவலக நேரத்தில் படிவத்தினைப் பெற்று அனைவரும் அங்கத்தவராகி பயன்பெறுவதே எங்களின் எதிர்பார்ப்பு.
மன்னார் பிரதேசசபையின் கீழ் இயங்கி வரும் 6 நூலகங்களிலும் நூலக அங்கத்துவப் படிவம் இலவசமாகபடிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்
 பேசாலை பொது நூலகம்
 தலைமன்னார் பொது நூலகம்
 எருக்கலம்பிட்டி பொது நூலகம்
 தாராபுரம் பொது நூலகம்
 உயிலங்குளம் பொது நூலகம்
 திருக்கேதீஸ்வரம் பொது நூலகம்

முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து பிரதேச சபையினால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
 

“மாகாணத்தின் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023”

இலங்கையின் பொது நிதி கணக்கியல் சங்கத்தினால்
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான போட்டியில்
“மாகாணத்தின் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023” குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு

மன்னார் பிரதேச சபை மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் 2023 உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு தொடர்பான பதிவுகள்

 

மன்னார் பிரதேசபையின் பொதுமக்கள் சேவைகள் பட்டயம் UNDP-CDLG Project

மன்னார் பிரதேசபையின் பொதுமக்கள் சேவைகள் பட்டயம்
UNDP-CDLG Project

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டம் – வெளிப்படுத்துகைப் பொதுக் கூட்டம் 2023

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டம் – வெளிப்படுத்துகைப் பொதுக் கூட்டம் 2023
மேற்படி விடயம் தொடர்பான கூட்டம் 25.09.2023 ஆம் திகதி இன்று பி.ப. 2.30 மணியளவில் எமது மன்னார் பிரதேசபையின் மண்டபத்தில் பிரதேசபை நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் LDSP மூலம் உள்ளுராட்சி மன்றத்திற்கு கிடைக்கும் நிதியை பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் பட்டியல் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது, இந்நிகழ்வில் சனசமூக நிலையம் ,மாதர் அபிவிருத்திச்சங்கம்,கிராம அபிவிருத்திச்சங்கம், மற்றும் பொது அமைப்புகள் கலந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்..

மாவட்ட மட்டத்தில் முதலிடம்

உலக மண் தினத்தினை முன்னிட்டு உள்ளூராட்சித் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்ட “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற செயற்திட்டத்தில் எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட தலைமன்னார் ஸ்ரேசன் கிராமம் தெரிவுசெய்யப்பட்டு அக் கிராமத்திற்கு உட்பட்ட இளந்தளிர் சனசமூக நிலைய மாணவர் குழுவினால் பின் வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
1. மரக்கன்றுகளை நாட்டுதல்
2. எமது சூழலை தூய்மையாக பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
3. சுவர் ஓவியம் வரையும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச் செயற்பாட்டின்மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
05.12.2023 ஆம் திகதி வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு மற்றும் உள்ளுராட்சித் திணைக்களம் இணைந்து நடாத்திய ‘சர்வதேச மண் தினம் ‘ நிகழ்வில் இளந்தளிர் சனசமூக நிலையம் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக ரூபா . 25,000.00 பணப்பரிசினை பெற்றுக்கொண்டது. பரிசினை பெற்றுகொண்ட இளந்தளிர் சன சமூக நிலையத்திற்கு பாராட்டுகளைதெரிவித்துக்கொள்ளுகின்றோம்.