மாவட்ட செயலாளரின் தலைமையில் 18.10.2023 ம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற டெங்குபரவலைக்கட்டுப்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் 24.10.2023ம் திகதியில் இருந்து 31.10.2023ம் திகதி வரை எமது மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 24.10.2023 ம் திகதி எமது மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான பொருட்கள் எமது பிரதேச சபை ஊழியர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடனும் எமது வாகனங்களின் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.




