“மாகாணத்தின் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023”

இலங்கையின் பொது நிதி கணக்கியல் சங்கத்தினால்
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான போட்டியில்
“மாகாணத்தின் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023” குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு

மன்னார் பிரதேச சபை மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் 2023 உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு தொடர்பான பதிவுகள்

 

மன்னார் பிரதேச சபைக்கு 2024 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு வழங்குனர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

மன்னார் பிரதேச சபைக்கு 2024 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு வழங்குனர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசபையின் பொதுமக்கள் சேவைகள் பட்டயம் UNDP-CDLG Project

மன்னார் பிரதேசபையின் பொதுமக்கள் சேவைகள் பட்டயம்
UNDP-CDLG Project

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டம் – வெளிப்படுத்துகைப் பொதுக் கூட்டம் 2023

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டம் – வெளிப்படுத்துகைப் பொதுக் கூட்டம் 2023
மேற்படி விடயம் தொடர்பான கூட்டம் 25.09.2023 ஆம் திகதி இன்று பி.ப. 2.30 மணியளவில் எமது மன்னார் பிரதேசபையின் மண்டபத்தில் பிரதேசபை நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் LDSP மூலம் உள்ளுராட்சி மன்றத்திற்கு கிடைக்கும் நிதியை பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் பட்டியல் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது, இந்நிகழ்வில் சனசமூக நிலையம் ,மாதர் அபிவிருத்திச்சங்கம்,கிராம அபிவிருத்திச்சங்கம், மற்றும் பொது அமைப்புகள் கலந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்..

மாவட்ட மட்டத்தில் முதலிடம்

உலக மண் தினத்தினை முன்னிட்டு உள்ளூராட்சித் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்ட “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற செயற்திட்டத்தில் எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட தலைமன்னார் ஸ்ரேசன் கிராமம் தெரிவுசெய்யப்பட்டு அக் கிராமத்திற்கு உட்பட்ட இளந்தளிர் சனசமூக நிலைய மாணவர் குழுவினால் பின் வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
1. மரக்கன்றுகளை நாட்டுதல்
2. எமது சூழலை தூய்மையாக பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
3. சுவர் ஓவியம் வரையும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச் செயற்பாட்டின்மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
05.12.2023 ஆம் திகதி வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு மற்றும் உள்ளுராட்சித் திணைக்களம் இணைந்து நடாத்திய ‘சர்வதேச மண் தினம் ‘ நிகழ்வில் இளந்தளிர் சனசமூக நிலையம் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக ரூபா . 25,000.00 பணப்பரிசினை பெற்றுக்கொண்டது. பரிசினை பெற்றுகொண்ட இளந்தளிர் சன சமூக நிலையத்திற்கு பாராட்டுகளைதெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

மன்னர் பிரதேசசபையின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிறைவு மற்றும் உள்ளுராட்சி வார நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு விழா

மன்னர் பிரதேசசபையின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிறைவு மற்றும் உள்ளுராட்சி வார நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு விழா 23.11.2023 ஆம் திகதி எமது சபையில் சிறப்பாக இடம்பெற்றது.
+17
All reactions:

Rubini Rubs, Thushy Merlin and 13 others

லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் எமது மன்னார் பிரதேச சபையில் 17.11.2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் எமது மன்னார் பிரதேச சபையில் 17.11.2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மன்னார்பிராந்திய உள்ளுராட்சி உதவிஆணையாளர் மற்றும் பிராந்திய உள்ளுராட்சி அலுவலக உத்தியோகத்தர்கள், எமது மன்னார் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
+10
All reactions:

Rubini Rubs, Jancy Dariyas and 5 others

PROVINCEAL SPECIFIC DEVELOPMENT GRANT WORKS – 2023

Work Name – Kattaspathiri Concrete Road
Allocation – 4.0Mn
Source of Funds – PSDG
Name of Contractor – Thuram Construction.
Contract Period – 3 Months
Work Name – Pesalai Concrete Road
Allocation – 3.5Mn
Source of Funds – PSDG
Name of Contractor – S.T.S Fernando Construction.
Contract Period – 3 Months
+2
All reactions:

Clement Roshan, Kiriminath Kiriminath and 6 others