2025ஆம் ஆண்டுக்கு தேவையான ஒப்பந்த அடிப்படையிலான சுத்திகரிப்பு, மின்னியலாளர் சேவைகளுக்கான பெறுகைகள்

2025ஆம் ஆண்டுக்கு தேவையான ஒப்பந்த அடிப்படையிலான சுத்திகரிப்பு, மின்னியலாளர் சேவை

மன்னார் பிரதேசசபைக்கு பின்வரும் வழங்கல் சேவைகளுக்கான பெறுகைகள் 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025 மார்கழி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு கோரப்படுகின்றன.

1. சேவையின் விபரமும் வைப்புத் தொகைகளும்

சுத்திகரிப்புச் சேவை

சேவை 
இல
விபரம்
தேவைப்படும் 
ஆளணியின் 
எண்ணிக்கை
மீளளிக்கப்படாத 
வைப்புத்தொகை (ரூபா)
மீளளிக்கப்படும் 
வைப்புத்தொகை (ரூபா)
01 சுத்திகரிப்புச் சேவை வழங்கல் (திண்மக் கழிவகற்றல்) 2,000.00 20,000.00
பணியாளர்கள்

(ஆண்கள் 03)

 

03

காரியாலய காரிய சகாயர் (பெண் – 01)  

01

ஒப்பந்த அடிப்படையிலான மின்னியலாளர்

சேவை
இல
விபரம்
தேவைப்படும்
ஆளணியின் 
எண்ணிக்கை
மீளளிக்கப்படாத 
வைப்புத்தொகை (ரூபா)  
மீளளிக்கப்படும் 
வைப்புத்தொகை (ரூபா)

 

01 மின்னியலாளர்

(மன்னார் பிரதேசசபை எல்லைப் பரப்பு)

 

01 2,000.00 20,000.00

2. வைப்புக்கள்
பெறுகைக்கான வைப்புத்தொகைகளை (மீளளிக்கப்படாத, மீளளிக்கப்படும்) பிரதேசசபையின், வருமான பிரிவில், சமர்ப்பித்து பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். தெரிவு செய்யப்படாத பெறுகை மனுதாரர்களுக்கு பெறுகைகளுக்கான ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டதும், மீளளிக்கப்படக்கூடிய வைப்புப்பணம் மீளளிக்கப்படும்.

3. வியாபாரப்பதிவுச் சான்றிதழ்
பெறுகைப்பத்திரம் கோரும் நிறுவனங்கள் குறித்த சேவைக்கான பதிவினை உறுதிப்படுத்தும் பொருட்டு வியாபாரப்பதிவு சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும். அத்துடன் வடமாகாணத்தில் நிரந்தரப் பதிவினைக் கொண்டிருத்தல் அல்லது தமது கிளை அலுவலகத்தினையாவது கொண்டிருத்தல் வேண்டும்.

4. அனுபவச்சான்றிதழ்
கடந்தகால, நிகழ்கால அனுபவச்சான்றிதழ்களையும் பெறுகை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
கூலி வீதம் தொழிற் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கூலி வீதங்களிற்கு ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.

5. பெறுகைப்படிவங்கள் / ஆவணங்கள்
பெறுகை ஆவணங்கள் 12.11.2024 ஆம் திகதி தொடக்கம் 25.11.2024 ஆம் திகதி பி.ப 10.00 மணி வரையும் மன்னார் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில்; வழங்கப்படும். பெறுகைப் படிவங்கள் அனைத்தும் இரு பிரதிகளில் மூலப்பிரதி,இணைப்பிரதி எனக் குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.

6. பெறுகைகள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முறை
ஒவ்வொரு சேவைக்கும் வெவ்வேறாக விண்ணப்பிக்கவேண்டும் என்பதுடன் சகல முத்திரையிடப்பட்ட பெறுகைகளும் “செயலாளர்; பெறுகைகள் குழு, மன்னார் பிரதேசசபை ”. என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் சேவை விபரம் குறிப்பிடல் வேண்டும். நேரடியாக வழங்கினால் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும். பெறுகைகள் வைப்புத் தொகையை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை பெறுகைப் பத்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும.

7. சித்தியடையும் கேள்விதாரர் தங்களது கேள்வித்தொகையின் 5% இனை பாதுகாப்பு வைப்பாக 02.12.2024 ம் திகதிக்கு முன் செலுத்தி குறித்த சேவையின் பேரில் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் வேண்டும்.

8. இறுதித்திகதி
சகல முத்திரை இடப்பட்ட பெறுகைகளும் 27.11.2024ம் திகதி பி.ப 10.30 மணிவரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

9. பெறுகைகள் திறத்தல்
பெறுகை நேரம் முடிவடைந்தவுடன் பெறுகைப்பத்திரங்கள் 27.11.2024ம் திகதி பி.ப 10.30 மணிக்கு திறக்கப்படும். விண்ணப்பதாரரோ அல்லது எழுத்து மூலம் நியமிக்கப்பட்ட பிரதிநிதியோ பெறுகைகள் திறக்கும் போது சமூகமளிக்கலாம். பெறுகை நிபந்தனைகளுக்கு அமைவாக அனுப்பப்படாத ஆவணங்களும் பூரணமாக நிரப்பப்படாத நடைமுறை விலைகளுடன் ஒவ்வாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். மேற்படி பெறுகை கோரல்களை இரத்து செய்யவோ, நிறுத்தி வைக்கவோ, பகுதியாக வழங்குவதற்கோ, புதிதாகக் கோருவதற்கோ பெறுகைகள் குழுவுக்கு பூரண அதிகாரமுண்டு.

• பெறுகை தொடர்பான பெறுகைக் குழுவின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும். மேலதிக விபரங்களை 0232050002 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

 

மன்னார் பிரதேச சபையினால் 2024 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகள் தொடர்பான பதிவுகள்

மன்னார் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் நோக்கிலும்,  பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உப அலுவலக நூலகங்களினூடாக  பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் சித்திரம், பேச்சு, சுவரொட்டி, கவிதை, வாசிப்பு போன்ற போட்டிகள் உபஅலுவலக பொறுப்பதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.  அத்துடன் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் முன்பள்ளி மாணவர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டது. இவை தொடர்பான பதிவுகள்

 

 

2025 ஆம் ஆண்டுக்கான பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகள் என்பவற்றை வழங்குவதற்கு பதிவு செய்துகொள் விரும்பும் வழங்குநர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

மன்னார் பிரதேச சபையானது 2025 ஆம் ஆண்டுக்கான கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள்,வேலைகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்குத் தம்மைப் பதிவுசெய்து கொள்ளவிரும்பும் வழங்குநர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருகின்றது.

அட்டவணை-1, அட்டவணை-2, மற்றும் அட்டவணை-3 ஆகியவற்றில் உள்ளவாறு ஒவ்வொரு வழங்கல் சேவைக்கும் தனித்தனி விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதியுடன் 2024 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமமும் விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.

விண்ணப்பப்படிவங்களை எமது பிரதான அலுவலகத்தில் ரூபா 1,000.00 இனை பதிவுக் கட்டணமாகச் செலுத்தி அலுவலக நாட்களில் மு.ப. 9.00 -பி.ப. 3.00 வரை பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு செய்துகொண்டுள்ள நிறுவனங்களிடமிருந்து விலைகள் கோரப்பட்டு கொள்வனவுகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அதற்குப் புறம்பாகவும் விலைகளைக் கோரி கொள்வனவுசெய்யும் உரிமையை சபை தன்னகத்தே கொண்டுள்ளது.

நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

விண்ணப்பப்படிவங்களின் கடிதஉறையின் இடதுபக்க மேல் மூலையில் “வழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2025” எனக்குறிப்பிட்டு“ செயலாளர், மன்னார் பிரதேசசபை, காட்டாஸ்பத்திரி, பேசாலை”எ னும் முகவரிக்கு 2024.12.20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

அட்டவணை 1 ( பொருட்கள்)
1. அலுவலக உபகரணங்கள்(காகிதாதிகள், கணினி, நிழற் பிரதியாக்கல் இயந்திரம், தொலைநகல் இயந்திரம் மற்றும் குறித்த இயந்திரங்களுக்கான உதிரிப்பாகங்கள்).
2. விளையாட்டு உபகரணங்கள்.
3. இலத்திரனியல் பொருட்கள்; மற்றும் மின் பாவனைஉபகரணங்கள்.
4. கட்டிடநிர்மாணப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள்.
5. நூலகப் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள்.
6. சீருடைத்துணிமற்றும் ஏனைய துணிவகைகள்.
7. சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் கிருமிநாசினிவகைகள்,விளக்குமாறு,தும்புத்தடி, மொப்பர்,கால்துடைப்பம் மற்றும் ஏனைய பொருட்கள்.
8. வாகனஉதிரிப்பாகங்கள்,ரயர் மற்றும் டியூப் வகைகள்.
9. நீர்வழங்கலுக்கானபொருட்கள் மற்றும் மாபிள் கல் வகைகள்.
10. அலங்காரப் பொருட்கள்,பாதணிகள்,தோற்பொருட்கள் மற்றும் மழைக்கவசங்கள்.
11. எரிபொருட்கள் மற்றும் உராய்வுநீக்கிகள்.
12. தீந்தைகள் (Pயiவெ) மற்றும் நிறந்தீட்டும் பொருட்கள்.

அட்டவணை 2 (சேவைகள்)
1. மரத்தளபாடங்கள் மற்றும் உருக்குத்தளபாடங்கள் திருத்தல்.
2. இலத்திரனியல் சாதனங்கள் திருத்தல் (கணினி,தொலைநகல்,நிழற்பிரதியாக்கல் இயந்திரம் மற்றும் அதனோடு இணைந்தபொருட்களின்திருத்தமும் பராமரிப்புசெய்தலும்).
3. சகலவிதமானவாகனசுத்திகரிப்பு,திருத்தவேலைகள்மற்றும் வாகனங்களுக்குரியரியூப் ஒட்டுதல்.
4. ஒட்டுவேலைகள் மற்றும் உலோகவேலைகள்.
5. அச்சுவேலைகள்.
6. இறப்பர் முத்திரை மற்றும் அலுவலக அடையாள அட்டைகளைத் தயாரித்தல்.
7. பழைய பத்திரிகை மற்றும் கழிக்கப்பட்ட பொருட்கள் கொள்வனவுசெய்தல்.

 

அட்டவணை 3 (ஒப்பந்தவேலைகள்)
1. வீதிகள் நிர்மாணித்தலும் திருத்தவேலைகளும்.
2. கட்டடங்கள் நிர்மாணித்தலும் திருத்தவேலைகளும்.

2025ம் ஆண்டிற்கானபடவரைஞர்களைப் பதிவுசெய்தல்
1. NVQ – 5 in Drafting Technology (Buildings) கற்கைநெறியினைப் பூர்த்திசெய்துள்ளவர்கள் உரியசான்றிதழை சமர்ப்பித்து படவரைஞர் பதிவினைமேற்கொள்ளமுடியும்.
2. படவரைஞராகப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பப்படிவக் கட்டணமாகரூபா. 1000.00 செலுத்தவேண்டும்.
3. உரியவாறுஆவணங்கள் சமர்ப்பித்துபடவரைஞராகபதிவுமேற்கொள்வதற்குதெரிவுசெய்யப்படுபவர்களுக்கானகட்டணமாகரூபா 6,000.00 இனை செலுத்தவேண்டும்.
4. 2024.12.20ஆம் திகதிபி.ப. 3.00 மணிக்குமுன்னர் தங்கள் பதிவுகளை எமதுஅலுவலகத்தில் மேற்கொள்ளலாம்.
5. மேற்குறிப்பிட்டதிகதிக்குள் பதிவுகளை மேற்கொள்ள தவறும் படவரைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கானபடவரைஞராக மன்னார் பிரதேசசபையில் தொழிற்படமுடியாது என்பதனை தெரிவித்துகொள்கின்றேன்.

ழமேலதிகவிபரங்களுக்கு 023-2050002 அல்லது 023-2050001 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகதெடர்புகொள்ளவும்.

மன்னார் பிரதேச சபையின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாட்டிற்காக பாடசாலைகளுக்கு கழிவு நிறக்கூடைகள் வழங்கல்

மன்னார் பிரதேச சபையின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாட்டின், கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கத்திற்காவும் மற்றும் உலக மண்தினத்தினை முன்னிட்டு மாணவர்களால் எமது உள்ளுராட்சி மன்றத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பினை ஊக்குவிக்கும் முகமாகவும், மாணவர்களுக்கான விழிப்புணர்வினை வழங்கும் நோக்கில் Garbage Collecting Colour Bins மன் /தலைமன்னார் பியர் அ .த .க . பாடசாலை , மன் /உயிலங்குளம் றோ .க .த .க பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 

மக்கள் பங்களிப்புடனான பாதீடு முன்மொழிவுக்கூட்டம் – 2025

மன்னார் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான பாதீட்டினை தயாரிப்பதன் நோக்கில் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கூட்டங்கள் நடாத்தப்பட்டு தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கற்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வு – 2024

மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது 06.08.2024 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் செயலாளரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், நிதி உதவியாளர் மற்றும் அலுவலகம்சார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுதல்

எமது மன்னார் பிரதேச சபையின் எல்லைகுட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகளாகிய கண்ணாடி, பொலித்தீன் மற்றும் உக்கும் கழிவுகள் போன்றவை இனிவரும் காலங்களில் தரம் பிரித்தே அகற்றப்படும்.
அத்துடன் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான கொள்கலன்களும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் இவற்றை தரம் பிரித்து சேகரிக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்களில் இலவசமாக நூலக அங்கத்துவப்படிவங்கள் வழங்கல்

“புத்தகம்”
மூடிய பக்கங்களினுள்ளே முத்தாக ஒளிந்திருக்கும் உன் வாழ்வை உயர்த்தும் வைர வரிகள்.வாசிப்பின் முக்கியத்துவத்தினையும் அதன் பயன்பாட்டினையும் மாணவச்செல்வங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் உணர்ந்து பூரணமான உச்ச பயனை அடைவதனை நோக்காகக் கொண்டு மன்னார் பிரதேசசபை நூலக வாசக அங்கத்துவப் படிவத்தினை இலவசமாக வழங்கிக்கொண்டு வருகின்றது. எமது அனைத்து உப அலுவலக நூலகங்களிலும் அலுவலக நேரத்தில் படிவத்தினைப் பெற்று அனைவரும் அங்கத்தவராகி பயன்பெறுவதே எங்களின் எதிர்பார்ப்பு.
மன்னார் பிரதேசசபையின் கீழ் இயங்கி வரும் 6 நூலகங்களிலும் நூலக அங்கத்துவப் படிவம் இலவசமாகபடிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்
 பேசாலை பொது நூலகம்
 தலைமன்னார் பொது நூலகம்
 எருக்கலம்பிட்டி பொது நூலகம்
 தாராபுரம் பொது நூலகம்
 உயிலங்குளம் பொது நூலகம்
 திருக்கேதீஸ்வரம் பொது நூலகம்

முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து பிரதேச சபையினால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
 

Local Development Supporting Project (LDSP) PT3 ஆகிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பிரதேசசபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வேலைக்கான கேள்வி அறிவித்தல்

Local Development Supporting Project (LDSP) PT3 ஆகிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பிரதேசசபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வேலைக்கான கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது.