கேள்வி அறிவித்தல் – மன்னார் பிரதேச சபை

பாவனையற்ற வாகனங்களினை இரும்பு விலைக்கு விற்பனை செய்தல்                       தினக்குரல் பத்திரிகை - 21.03.2025 (5ம் பக்கம்)

அடிக்கல் நாட்டும் நிகழ்வு – 19.02.2025

வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கமைய மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுமதில்  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வானது 19.02.2025 அன்று பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.       

செயற்பட்டு மகிழ்வோம் பயிற்சிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக ஆரம்ப பிரிவு மாணவர்களின் செயற்திறனை அதிகரிப்பதனை நோக்கமாகக்கொண்டு செயற்பட்டு மகிழ்வோம் பயிற்சி மற்றும் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்கில், மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மன்/ தலைமன்னார் றோ.க.த.க.பா, மன்/ சென்மேரிஸ் வித்தியாலயம், மன்/ புதுக்கமம் அ.த.க.பா, மன்/ எருக்கலம்பிட்டி அ.மு.க.பா, மன்/ கட்டுக்காரன் குடியிருப்பு றோ.க.த.க.பா,  மன்/ சிறுத்தோப்பு றோ.க.த.கபா, மன்/ நொச்சிக்குளம் றோ.க.த.க.பா ஆகிய பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டது.

 

 

சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை – 2024

மன்னார் பிரதேச சபையில் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறையானது 13.12.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப்பட்டறையில்  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி அன்ரறியா அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு சுற்றுச்சூழல் முகாமைத்துவம்  தொடர்பான விளக்கங்களையும்,  பொது சுகாதார பரிசோதகர் பர்சின் அவர்கள் சுய பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களையும் வழங்கினார்கள். இப்பயிற்சிநெறியில் செயலாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், அலுவலகம் சார் உத்தியோகத்தர்கள், உப அலுவலக பொறுப்பதிகாரிகள், சாரதிகள் மற்றும் சுகாதார தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் பெங்கல் புயல் அனர்த்த காலத்தில் களப்பணியாற்றிய ஊழியர்களுக்கான மெச்சுரையும் வழங்கப்பட்டது.    

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – 2024

மன்னார் பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் 2024 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் பாடசாலைகள் மூலம் நடாத்தப்பட்டது. உப அலுவலகங்களின் நூலகங்கள் சார்பாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டது.  

உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2024

மன்னார் பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறையானது 09.12.2024 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப்பட்டறையில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், மற்றும் சட்டங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். இப்பயிற்சிநெறியில் செயலாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் அலுவலகம் சார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.  

பாலியல் நோய் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து மன்னார் பிரதேச சபையின் எருக்கலம்பிட்டி உப அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட எருக்கலம்பிட்டி உப அலுவலக பிரிவிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பாலியல் நோய் மற்றும், பாலின சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு எருக்கலம்பிட்டி உப அலுவலக கலாச்சார மண்டபத்தில் 03.12.2024 ஆம் திகதி நடைபெற்றது.

அனர்த்த கால நிலைக்கு பின்னர் உயர்தர பரீட்சையினை முன்னிட்டு பாடசாலைகளில் தொற்றுநீக்கல் நடவடிக்கைகள்

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் 04.12.2024 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உயர்தரபரீட்சை மண்டப ஒழுங்கு நடவடிக்கையின்போது வெள்ள அனர்த்தத்தினால் ஏற்படும் கிருமி தாக்கத்தை தடுக்கும் வகையில் கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் சேவைகள்

மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வெள்ளத்தினை வெளியேறுவதற்கேற்ற வகையில் வாய்க்கால்கள் வெட்டிவிடல் போன்ற சேவைகள் மன்னார் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.