வியாபார உரிமம்
உள்ளூராட்சிமன்றத்தின் எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், வசதி நலனோம்பல் மற்றும் எல்லா வசதிகளையும் பாதுகாப்பதற்கான விடயங்களை முறைப்படுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் நிருவாகம் ஆகியவை உள்ளூராட்சிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான கடமைப் பொறுப்புகளாகும். உள்ளூராட்சிமன்றங்களின் எல்லைக்குள் நடைபெறுகின்ற வணிகம் அல்லது வியாபாரங்களுக்கிடையில் பொது மக்களின் சுகாதாரம், வசதி மற்றும் நலனோம்பல் என்பவற்றுக்கு ஏற்புடையதாக உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களின் கீழ் அல்லது உள்ளூராட்சிமன்றங்களினால் உருவாக்கப்பட்ட உப விதிகளின் ஏற்பாடுகளுக்கமைவாக குறித்த வணிகம் அல்லது வியாபாரம் சார்ந்து குறித்த உள்ளூராட்சிமன்றத்தின் உரிமம் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இந்த பணியினை ஒழுங்குபடுத்தல் குறித்த உள்ளூராட்சிமன்றத்தின் பொறுப்பு ஆகும்.
வியாபார உரிமம் பெறுவதற்கு மற்றும் வியாபார பதிவு செயவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
வியாபார உரிம பற்றுச்சீட்டு (உப அலுவலகம்)
வியாபார உரிம படிவம்
வியாபார உரிமம் தொடர்பான அறிக்கை
பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை
சுற்றுச்சூழல் தொடர்பான அறிக்கை
(3 படிவங்களையும் பிரதேச செயலகத்தில் பெறல்)
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்
வருமான பரிசோதகர்
விடய உத்தியோகத்தர்
சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை
5-14 நாட்கள்