திரவக்கழிவகற்றல் சேவைகள் தொடர்பான விபரங்கள்
உள்ளுராட்சி மன்றங்கள் தமது அதிகார எல்லையினுள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டதாகும். அதிகார எல்லையினுள் கழிப்பறைகளில் காணப்படும் மலக் கழிவுகளை அகற்றுவது இப் பணிகளின் ஒரு அம்சமாக அமைவதுடன் அது மக்களுக்குக்கான சுகாதார வசதியையும் மேம்படுத்தி உறுதிப்படுத்துகின்றது
திரவக்கழிவகற்றல் சேவையினை கீழ் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்
1. அலுவலகத்தில் திரவக்கழிவகற்றல் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல்.
2. உரிய பணத்தொகையினை செலுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளல்
3. சேவையினை பெறுதல்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்.
மேலதிக தொடர்புகளுக்கு
முன் அலுவலக உத்தியோகத்தர் : திருமதி.ர.ந.றெ.பி.ஆஞ்சலின் குருஸ்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் : திரு.சதாசிவம் மைதீபன்
திரவக்கழிவகற்றல் வாகன சாரதி : திரு.வில்பிரட் அக்வினோத் டயஸ்
தொடர்பு இலக்கம்-0232050002/0772047449
கால எல்லை.
ஒரு நாள் சேவை
கட்டணம்.
திரவக்கழிவகற்றல் கட்டணம் ரூ.
தலைமன்னார், உயிலங்குளம் மற்றும் திருக்கேதீஸ்வரம் -12500/-
பேசாலை, தோட்டவெளி, கரிசல் மற்றும் வங்காலைப்பாடு - 11000/-
