“புத்தகம்”
மூடிய பக்கங்களினுள்ளே முத்தாக ஒளிந்திருக்கும் உன் வாழ்வை உயர்த்தும் வைர வரிகள்.வாசிப்பின் முக்கியத்துவத்தினையும் அதன் பயன்பாட்டினையும் மாணவச்செல்வங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் உணர்ந்து பூரணமான உச்ச பயனை அடைவதனை நோக்காகக் கொண்டு மன்னார் பிரதேசசபை நூலக வாசக அங்கத்துவப் படிவத்தினை இலவசமாக வழங்கிக்கொண்டு வருகின்றது. எமது அனைத்து உப அலுவலக நூலகங்களிலும் அலுவலக நேரத்தில் படிவத்தினைப் பெற்று அனைவரும் அங்கத்தவராகி பயன்பெறுவதே எங்களின் எதிர்பார்ப்பு.
மன்னார் பிரதேசசபையின் கீழ் இயங்கி வரும் 6 நூலகங்களிலும் நூலக அங்கத்துவப் படிவம் இலவசமாகபடிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்
பேசாலை பொது நூலகம்
தலைமன்னார் பொது நூலகம்
எருக்கலம்பிட்டி பொது நூலகம்
தாராபுரம் பொது நூலகம்
உயிலங்குளம் பொது நூலகம்
திருக்கேதீஸ்வரம் பொது நூலகம்
