உலக மண் தினத்தினை முன்னிட்டு உள்ளூராட்சித் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்ட “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற செயற்திட்டத்தில் எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட தலைமன்னார் ஸ்ரேசன் கிராமம் தெரிவுசெய்யப்பட்டு அக் கிராமத்திற்கு உட்பட்ட இளந்தளிர் சனசமூக நிலைய மாணவர் குழுவினால் பின் வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
1. மரக்கன்றுகளை நாட்டுதல்
2. எமது சூழலை தூய்மையாக பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
3. சுவர் ஓவியம் வரையும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச் செயற்பாட்டின்மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
05.12.2023 ஆம் திகதி வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு மற்றும் உள்ளுராட்சித் திணைக்களம் இணைந்து நடாத்திய ‘சர்வதேச மண் தினம் ‘ நிகழ்வில் இளந்தளிர் சனசமூக நிலையம் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக ரூபா . 25,000.00 பணப்பரிசினை பெற்றுக்கொண்டது. பரிசினை பெற்றுகொண்ட இளந்தளிர் சன சமூக நிலையத்திற்கு பாராட்டுகளைதெரிவித்துக்கொள்ளுகின்றோம்.


