மன்னார் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக கர்ப்பிணித்தாய்மார்க்கான போசாக்கு உணவு வழங்கும் திட்ட நிகழ்ச்சியானது இன்று (14.09.2023) வியாழக்கிழமை அன்று எமது சபையின் செயலாளர் திருமதி M.L.செல்வராஜ் குரூஸ் அவர்களின்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் எமத வேண்டுகோளிற்கமைய மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவுகளுக்கமைய மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வருமானம் குறைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இத்திட்டத்தினூடாக குறை நிரப்பு போசாக்கிற்கான சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன. இதில்75 பயனாளிகள் பயனடைந்தள்ளனர் சென்ற வருடத்தினை விட இந்த வருடம் 25 பயனாளிகள் அதிகமாகபயனடைந்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




