உலக சுத்திகரிப்பு தினம் 2023

உலக சுத்திகரிப்பு தினம் 2023
எமது மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட உபஅலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு கீழ் உள்ளவாறு
அறிவுத்தல் வழங்கப்பட்டு உலக சுத்திகரிப்பு தினம் 2023.09.16 ஆம் திகதி முழுமையாக அனுஸ்ரிக்கப்பட்டது அத்துடன் எமது பிரதானஅலுவலகத்தில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்ளின் முழுபங்களிப்புடன் 15.09.2023 ஆம் திகதி துப்பரவு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன
உபஅலுவலக பொறுப்பதிகாரி
பேசாலை,தலைமன்னார்,எருக்கலம்பிட்டி,தாராபுரம், உயிலங்குளம்,திருகேதீஸ்வரம்
மேற்படி விடயம் தொடர்பாக ஒவ்வாறு வருடமும் செப்ரம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கொண்டாடப்படும் உலக சுத்திகரிப்பு
தினம் “முறையற்ற வகையில் கடற்கரை,ஆற்றினை அண்டிய காடுகள் மற்றும் பாதைகளுக்கு விடுவிக்கும் கழிவுகளை சுத்திகரித்தல்” எனும் தொணிப்பொருளுக்கமையவாக எதிர் வரும் 2023.09.16 ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது.
எனவே மேற்படி தொணிப்பொருளுக்கமையவாக 2023.09.16 ஆம் திகதி உபஅலுவலக எல்லைப்பரப்ற்குள் உள்ள பிரதான வீதி கடற்கரையோரங்கள் மற்றும் கால்வாய் பகுதியில் அடைபட்டுள்ள குப்பைகளை அகற்றி துப்பரவு செய்யப்பட்டது
மன்னார் பிரதேச சபை

கர்ப்பிணித்தாய்மார்க்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம்

மன்னார் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக கர்ப்பிணித்தாய்மார்க்கான போசாக்கு உணவு வழங்கும் திட்ட நிகழ்ச்சியானது இன்று (14.09.2023) வியாழக்கிழமை அன்று எமது சபையின் செயலாளர் திருமதி M.L.செல்வராஜ் குரூஸ் அவர்களின்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் எமத வேண்டுகோளிற்கமைய மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவுகளுக்கமைய மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வருமானம் குறைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இத்திட்டத்தினூடாக குறை நிரப்பு போசாக்கிற்கான சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன. இதில்75 பயனாளிகள் பயனடைந்தள்ளனர் சென்ற வருடத்தினை விட இந்த வருடம் 25 பயனாளிகள் அதிகமாகபயனடைந்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.