டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் 2023 –

டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்
2023 – மன்னார் பிரதேசசபை.
எமது சபையினால் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கென செயற்படுத்தி வரும் நிகழ்ச்சித்திட்டங்களில் சுகாதார நலன் பேணல் தொடர்பான விடயமாக டெங்கு ஒழிப்பு அமைகின்றது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடக்கம் பல நிகழ்வுகளும் சபையால் நடாத்தப்பட்டது. முதலில் செயலாளரின் அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி, தலைமன்னார், உயிலங்குளம்,பெரியகரிசல் சின்னக்கரிசல் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள் இடம்பெற்றது.இந்நிகழ்வானது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தலா 40 பேரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. தொடர்ந்து எமது உப அலுவலகப்பகுதிகள் அவற்றின் கீழுள்ள வட்டாரங்களில் சிரமதானம் மற்றும் குப்பை அகற்றல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இது பெப்ரவரி தொடக்கம் மே மாதமளவில் செயற்படுத்தப்பட்டது. டெங்கு ஒழிப்பின் விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள்,பொது அறிவிப்புகள் மன்னார் பிரதேசசபை பரப்புகளான உயிலங்குளம் முதல் தலைமன்னார் வரை நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களும் எமது சபை பொறுப்பதிகாரிகள், வருமான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கொண்டும் நிறைவேற்றப்பட்டு டெங்கு நோயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதையிட்டு எமது சபை திருப்தியடைந்துள்ளது.தொடர்ந்தும் இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் நலன் கருதி நாம் நிறைவேற்ற தயாராக உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *