பால்நிலை பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி பட்டறை

OFFER நிறுவனத்தின் அனுசரனையுடன் மடு பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் வளவாளர்களாகவும் பிரதேசசபை அலுவலர்கள் மற்றும்
சனசமூகநிலைய உறுப்பினர்கள் பயனாளிகளாகவும் கலந்து கொண்ட பால்நிலை
பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி பட்டறை 24.05.2023 ஆம் திகதி எமது
பிரதேசசபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்த…

See more

முன்பள்ளி மாணவர்களுக்கான துணைபோசாக்கு உணவு வழங்கல் திட்டம்

உள்ளூராட்சி மன்றங்களினால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டு
நிதித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான
துணைபோசாக்கு உணவு வழங்கல் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் கடந்த 02.05.2023 ஆம் திகதி தொடக்கம் 11.08.2023 ஆம் திகதி
வரையான காலப்பகுதியில் 60 பாடசாலை நாட்களுக்கு துணைபோசாக்கு உணவு வழங்கப்பட்து.
இதன் மூலம் மன்னார் பிரதேசசபையின் கீழுள்ள 40 முன்பள்ளிகளுக்குட்பட்ட 1174
மாணவர்கள் பயனடைந்தனர். இத்திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்குமுகமாக
தாராபுரம் முன்பள்ளியில் எமது சபையின் செயலாளர்ரூபவ் சனசமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்ரூபவ் குடும்பநல உத்தியோகத்தர்ரூபவ் பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும்
பெற்றோர்கள் கலந்து கொண்டு தேசியகொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு 12 சனசமூகநிலையங்கள் தமது பூரண ஒத்துழைப்பினை
வழங்கிநின்றன. திட்டத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் மாணவர்களின் உடல் எடை
திணிவுச்சுட்டி அளவிடப்பட்டதன் மூலம் இத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் பயனடைந்துள்ளமை
அவதானிக்கப்பட்டது. மாணவர்களின் உடல் எடை திணிவுச்சுட்டி அதிகரித்ததன் அடிப்படையில்
பெற்றோர்கள் தமது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.