மன்னார் பிரதேசசபையின் கட்டுப்பாட்டிலும் மதிப்பிற்குரிய செயலாளர் அவர்களின் மேற்பார்வையின் கீழும் செயற்பாட்டிலுள்ள நூலகங்கள்
எமது மன்னார் பிரதேசசபை எல்லைப்பரப்பிற்குள் உள்ளடங்குவதாக ஆறு உப அலுவலகங்கள் காணப்படுகின்றன. குறித்த ஒவ்வொரு உப அலுவலகப் பிரிவிற்கும் (தலைமன்னார், பேசாலை, எருக்கலம்பிட்டி, தாராபுரம், உயிலங்குளம், திருக்கேதீஸ்வரம்) தலா ஒரு நூலகம் அமைக்கப்பட்டு ஆறு நூலகங்கள் இயங்குகின்றன. குறித்த நூலகங்களில் விசேடமாக மாணவர் பயன்பாட்டிற்காக கடந்தகால பரீட்சை வினாத்தாள் தொகுப்புகள் (OL / AL/ Past papers) கட்டுரைப்புத்தகங்கள், நற்சிந்தனைகளை கட்டியெழுப்பும் நூல்கள் இன்னும் ஏராளமான புத்தகப்பிரிவுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து நூலகங்களும் மன்னார் பிரதேசசபை மக்களின் பொது நன்மைக்காகவே அமைக்கப்பட்டுள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
jpdrup Nritfs;
வாசகர் பத்திரிகைப் பிரிவு
நூல் இரவல் பகுதி
E- Learning வசதி
வருடாந்த வாசிப்பு மாத போட்டிகள் (மாணவர்களுக்கானது)
நூலக அங்கத்துவக்கட்டணம் :
பாடசாலை மாணவர்கள் : ரூ 120
பொதுமக்கள்: ரூ 170
தொடர்புகளுக்கு,
S.P. அஸ்மினி கௌசல்யா - நூலக உதவியாளர் - எருக்கலம்பிட்டி பொது நூலகம்
அஜிறா - நூலக உதவியாளர் - தாராபுரம் பொது நூலகம்
அமலசெபா அல்போன்ஸ் அகிலதாஸ் - நூலக உதவியாளர் - தலைமன்னார் பொது நூலகம்
தொ.பே.இல – 0232050001 / 0232050002
Email - mnps2006@gmail.com