தொற்றுநோய் தடுப்பு தொடர்பான விபரங்கள்
டெங்கு கட்டுப்பாடு
எமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய இடங்களை சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து அவற்றை இனங்கண்டு டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு கள விஜயங்கள் மற்றும் சிரமதான பணிகள் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், வாராந்த சிரமதான செயற்பாடுகள் மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



