மன்னார் பிரதேசசபையின் வரலாறு
எம்மைப்பற்றி
பெயர் : மன்னார் பிரதேச சபை
முகவரி : காட்டாஸ்பத்திரி, பேசாலை
மாகாணம் : வடமாகாணம்
மாவட்டம் : மன்னார்
பிரதேச செயலாளர் பிரிவு : மன்னார்
தொலைபேசி இலக்கம் : 0232050002/0232050001
மின்னஞ்சல் முகவரி : mnps2006@gmail.com
நிறுவனத்தின் சுருக்க விபரம்
மன்னார் பிரதேசசபையானது 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரதேசசபைகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிரதேசசபை என்ற பெயரில் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களையும் உள்ளடக்கி செயற்பட்டபோதிலும், 2006.04.15 இல் நகரசபை விரிவடைந்து தனித்து தனது ஆளுகை பிரதேசங்களை உள்ளடக்கி செயற்படத்தொடங்கியது.
2011 ஆம் ஆண்டு பிரதேச சபைக்கான தேர்தல் முதலாவதாக நடத்தப்பட்டு 9 உறுப்பினர்கள் சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டார்கள். எனினும் 2017 ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு 11 வட்டாரங்களுக்கும் 21 உறுப்பினர்கள் சபை எறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
2006 ஆம் ஆண்டு மன்னார் நகரசபை தனியாக இயங்க ஆரம்பித்த பின்னர் நகரசபை எல்லை தவிர்ந்த 189.08 சதுர கிலோமீற்றர் பரப்பளவை இரண்டு பகுதிகளாக மன்னார் தீவினுள்ளும், பெருநிலப்பரப்பிலும் தனது ஆளுகையினைக்கொண்டுள்ளது.
34 கிராமசேவகர் பிரிவுகளையும், 146 கிராமங்களையும், 6 பிரதேசசபை உப அலுவலகங்களையும்உள்ளடக்கி மன்னார் பிரதேசசபையானது இயங்கிவருகின்றது. 2022 ஆம் ஆண்டு மன்னார் பிரதேச செயலக புள்ளிவபர கையேட்டின்படி 13127 குடும்பங்களையும், 46909 சனத்தொகையையும் கொண்டமைந்துள்ளது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் விபரம்
1 S. மார்ட்டீன்டயஸ் 2011- 2015 0768604404
2 S.H.M.முஜாஹிர் 09.03.2018 - 31.12.2021 0718426729
3 M.I.Mஇஸ்ஸதீன் 12.01.2021 - 19.03.2023 0712136697
மன்னார் பிரதேச சபையின் வட்டார வரைபடம்